சொல்வதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்அல்லவா ?ஒவ்வொருத்தருக்கும் நல்ல கணவனோ,நல்ல மனைவியோ கிடைத்தால்
வாழ்க்கையில் கண்டிப்பாக வசந்தம் வரும்.
"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்"என்று சொல்வதுபோல் ஒரு பெண்ணுக்கும் கணவன் அமைவது அப்படித்தான்,
என்று கொள்ளவேண்டும்.இரு மனங்களின் சங்கமமே இல்வாழ்க்கை.இதில்
ஒரு மனம் முடங்கிப்போனாலோ,அல்லது தடம் மாறிப்போனாலோ
இல்வாழ்க்கை இருண்ட வாழ்க்கையாகிவிடும் என்பதை குடும்பமானவர்களும்,குடும்பமாக போகிறவர்களும் உணரவேண்டும்.
அந்தக் காலங்களில் காலையில் நித்திரைவிட்டு எழும்போது கடவுள்களை
வணங்காமல் கணவனையே தெய்வமாக கருதி வணங்கிய பெண்கள்
இருந்திருக்கிறார்கள்.ஆனால் தற்காலத்தில் பெண்கள் இப்படி செய்வது
இல்லை.ஒருசிலர் விதிவிலக்காக இருக்கலாம்.நாகரிக,அறிவியல் உலகில்
இது அவசியமும் இல்லைத்தான்.ஆனால் ஒரு பெண் இல்வாழ்க்கைக்கு
ஏற்ற நற்குணங்களை உடையவளாகவும்,தன் கணவரின் கஷ்ட,நஷ்டங்களில்,நல்லது,கெட்டதுகளில் பங்கெடுப்பவராகவும்,
வருவாய்க்கு தக்கபடி செலவு செய்பவராகவும் இருந்தால் நிட்சயமாக
அது நல்ல வாழ்க்கையையும்,மகிழ்ச்சியையும் தரும்.அதேபோல் கணவனும்,மனைவியின் மனம் நோகாமல்,அன்பாகவும்,ஆதரவாகவும்
தனிமனித ஒழுக்கம் கொண்டவனாகவும் இருந்தால் கண்டிப்பாக வாழ்க்கையில் நிம்மதியும்,சந்தோசமும் இருக்கும்.
எமது சமூகத்தில் தற்பொழுதெல்லாம் பல குடும்பங்களுக்குள் பிரச்சினைகளும்,சண்டை சச்சரவுகளும்,மனமுறிவுகளும் ஏற்படுவதை
பரவலாக பார்க்க முடிகிறது.இது சிலநேரம் திருமண முறிவில்கூட
கொண்டு விட்டுவிடுகிறது.பத்து,பதினைந்து வருட இல்வாழ்க்கையுடனும்
ஓரிரு குழந்தைகளை பெற்றபின்பும் இப்படியான விவாகரத்துகள்
இப்பொழுது பரவலாக இடம்பெறுகின்றன.குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் எம்மவர்மத்தியில் நடக்கின்றன.இதற்கு என்ன காரணம்
எங்கே தவறு நடக்கிறது?யார் பிழை விடுகிறார்கள்?என்ற கேள்விகள்
எழும்பொழுதுதான் நாம் பலவற்றை பதிலாக அறியமுடிகிறது.
தன்னலம்,விட்டுக்கொடுக்காதசுபாவம்,ஆணவம்,நாகரீகமோகம்,
ஆடம்பரஉச்சம்,ஊதாரிச்செலவுகள். கருத்துமோதல்கள்,ஒவ்வொருவரின்
ஒவ்வாதசெயல்பாடுகள்,பொருளாதரத்தில் தனித்து நிற்கக்கூடிய வல்லமை
போன்ற காரணங்கள் இருபாலாரிடமும் ஏற்படுகின்றபோது கருத்து
மோதல்கள் ஏற்பட்டு கடைசியில் மணமுறிவு ஏற்படும் சூழல் வருகிறது.
மேற்குலக சமூகத்தில் இதுவொரு சாதாரண விடயமாக இருந்தாலும்
எமது சமூகத்திற்கு இது ஒத்துவருமா?என்று பார்க்க வேண்டும்.பல குடும்பங்கள் பிரிந்து வாழ்வதையும்,பிள்ளைகள் வேறாக வாழ்வதையும்
பார்க்க முடிகிறது.தமிழ் கலாச்சாரம்,விழுமியங்கள் பற்றி அக்கறை
இல்லாதவர்களுக்கு இது பெரிய விடயமாக இருப்பதில்லை.ஆனால்
இந்த பண்பாட்டுக் கோலங்களில் வாழ விருப்புகிறவர்களுக்கு இது பல
விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.எப்படியான பாதிப்பு?என்று பார்த்தால்,
மனஉழைச்சல்,மன அழுத்தம்,விரக்தி,தன்னிலை மறத்தல்,இறுதியில்
தற்கொலை முடிவு என்று செல்வதை நாம் பார்க்கலாம்.
மனித வாழ்க்கை என்பது ஒரு குறுகிய காலம்தான்.இதில் ஏதோ பிறந்தோம்
வாழ்ந்தோம்,இறந்தோம் என்றில்லாமல் எப்படி வாழ்ந்தோம்,வாழ்கிறோம்,
வாழ்வோம் என்று பார்க்க வேண்டும்.அதுதான் சொல்வார்கள்,முப்பது
வயதில் ஒருவர் தன் வாழ்க்கையை திருப்பிப் பார்க்கவேண்டும்.ஏன் தெரியுமா?
ஏதாவது தப்பு பண்ணியிருக்கிறோமா?என்பதற்காக.பண்ணியிருந்தால்
திருத்த வேண்டும்.நாற்பது வயதில் மீண்டும் பார்க்க வேண்டும் தப்பெல்லாம்
சரியாகிவிட்டதா,நாம் நன்றாக வாழ்கிறோமா என்பதற்காக.அறுபது வயதில்
திரும்பி பார்க்க வேண்டும் நாம் திருப்தியாக வாழ்ந்தோமா என்பதற்காக.
அறுபது வயதில் ஜெயித்தவர்களை அணுகிக் கேட்டால் சொல்வார்கள்
தாங்கள் ஜெயித்ததற்கு காரணம் குடும்பமே என்று.குடும்பம் என்ற
அமைப்பை சிதைத்துவிட்டு எப்படி வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பது?
என்பதை சிந்தியுங்கள்.
உங்கள் கையிலேதான் வாழ்கையின் உந்துகோல் இருக்கிறது.தெரிந்து
கொள்ளுங்கள்.வள்ளுவர் அழகா சொல்லியிருக்கிறார்,
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்" என்று..
உலகத்தில் வாழ வேண்டிய முறைப்படி இல்லறம் மேற்கொண்டு
வாழ்பவர்கள் வானுலகில் உள்ள தேவருள் ஒருவராக வைத்து
மதிக்கப் படுவார்கள். நீங்கள் எப்படி?உங்கள் குடும்பம் எப்படி?

மனித வாழ்க்கை என்பது ஒரு குறுகி காலம்தான்.இதில் ஏதோ பிறந்தோம்
வாழ்ந்தோம்,இறந்தோம் என்றில்லாமல் எப்படி வாழ்ந்தோம்,வாழ்கிறோம்,
வாழ்வோம் என்று பார்க்க வேண்டும்....உங்கள் கையிலேதான் வாழ்கையின் உந்துகோல் இருக்கிறது.தெரிந்து கொள்ளுங்கள்...