தான் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் ஒரு மொழியை எங்கும்
கண்டதில்லை என்று சொன்னவன் பாரதி.தமிழ் மொழிக்கு இருக்கும் அழகும்,அர்த்தமும்,ஆழமும் வேறு எந்தமொழிக்கும் இல்லை என்பது அவனது கருத்தாக இருந்திருக்குமோ தெரியாது,ஆனால் அப்படி சொல்லி
வைத்திருக்கின்றான்.
தமிழை பலர் பலவிதமாக பேசுகிறார்கள்.தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள்
தங்கள் பிரதேசத்திற்குரிய வழக்கிலே பேசுவார்கள்.குறிப்பாக மதுரைத்தமிழ்,திருநெல்வேலிதமிழ்,கொங்குதமிழ்(கோயாம்புத்தூர்தமிழ்)
தஞ்சாவூர் தமிழ், சென்னைதமிழ் என்று ஒவ்வொரு இடத்திற்குமான
வட்டார வழக்கு இருக்கிறது. இதேபோல் சிங்கப்பூர்தமிழ்,மலேசியதமிழ்
இலங்கைத்தமிழ் என்றும் பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்த இலங்கைதமிழ்
யாழ்ப்பாணத்துதமிழ்,மடக்களப்புதமிழ்,மலையகத்தமிழ்,கொழும்புதமிழ்
இஸ்லாமியத்தமிழ்,என்றும் வைப்படுத்தப் பட்டிருக்கிறது.
தமிழை எந்தப் பாணியில் பேசினாலும் அதில் ஒரு நளினமும்,அழகும்,கனதியும்
கண்டிப்பாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு அருமையான மொழியை எம்மில்
பலர் எப்படி பேசுகிறார்கள் என்பதுபற்றித்தான் இக்கட்டுரை பார்க்க இருக்கிறது
நல்ல தமிழையும்,நாடகத் தமிழையும் நாங்கள் பேசுவதை விட்டுவிட்டால்
நாளைய சந்ததிகள் எப்படி தமிழை பேசுவார்கள்?எம்மில் பலர் நாற்றத்தை
ஏற்படுத்தும் வகையில் நாகரீகமற்ற முறையில் பேசும்போது கேட்பதற்கு
நாரசமாக இருக்கும். பல குடும்பங்களில் கணவன்,மனைவிகளுக்குள்
இடம்பெறும் சண்டை சச்சரவின்போது அவர்கள் பேசிக்கொள்ளும் முறையும்,அவர்கள் பயன்படுத்தும் சொற்களும் அருவருப்பாக இருக்கும்.
மதுபோதையில் இருந்தால் கெட்ட வார்த்தைகளைக்கூட இவர்கள் சரளமாக பேசுவதை கேட்கக் முடியும்.வயசுக்கு வந்த படித்த பிள்ளைகள்
வீட்டில் இருப்பதைப்பற்றியும் இவர்களுக்கு கவலையில்லை.கீழ்த்தரமான
மூன்றாம்தர சொற்கள் கொண்டு இவர்களுக்குகிடையே நடக்கும் வாக்கு
வாதங்கள்,ஏச்சுப் பேச்சுகள் உண்மையில் அருவருக்கும் விதத்தில் இருக்கும்.கொச்சையாகவும்,பச்சையாகவும் பேசும் இவர்கள் தன்மையை
என்னென்று சொல்வது?இவர்கள் வெளியில் பெரிய புள்ளிகளாகவும்
மற்றவர்கள் மதிக்கக் கூடியவர்களாகவும் இருந்து என்ன பயன்?வீட்டில்
பிள்ளைகள் முதலில் மதிக்க வேண்டும்.
சில குடும்பங்களில் மதுபோதையில் பலர் மதிகெட்டு நடப்பது மிகவும்
கேவலமாக இருக்கும்.ஐரோப்பிய நாடுகளிலும்,கனடா,ஆஸ்திரேலியா
போன்ற நாடுகளிலும் இருக்கும் சட்டங்களுக்கு பயந்து ஒருவரும்
அடித்து துன்புறுத்துவது கிடையாது.மீறி செய்பவர்களுக்கு தண்டனை
கிடைக்கும் என்பது இவர்களுக்கு தெரியும்.அதனால் இவர்கள் அடித்து
துன்புறுத்துவதற்கு பதிலாக அசிங்கமாக பேசிக்கொண்டே வீட்டுப் பொருள்களை உடைப்பது,கார் சாவியை மறைத்து வைப்பது,கடவுச் சீட்டை
ஒழித்து வைப்பது,வங்கி அட்டையை சேதப்படுத்துவது போன்ற பல
வழிகளில் தங்களின் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்கிறார்கள்.இந்த நடவடிக்கை
இருப்பதால் குடும்பங்களில் சந்தோசமும்,அமைதியும் இல்லாமல் போகிறது.
போதை தெளிந்தபின் இவர்கள் தங்கள் தவறை உணர்கிறார்களா? என்றால்
இல்லை.இவர்கள் மனிதர்களா அல்லது மிருகங்களா என்று கேட்கத்
தோன்றும்.
மற்றைய சமூகத்தினர் எப்படி நாகரீகமாக, நாணயமாக வாழ்கிறார்கள் என்று
இவர்கள் அறிந்துகொள்வதில்லையா?இல்லை வேண்டுமென்றே இப்படி
நடக்கிறார்களா?என்று புரிவது கஷ்டமாக இருக்கிறது.கல் தோன்றி மண்
தோன்றா காலத்திற்கு முன்தோன்றிய மூத்தகுடியாம் தமிழ்குடி என்று
சொல்கிறார்கள்.ஆனால் இவர்களுக்கு பின் தோன்றிய இனம்,அல்லது
சமூகம் எப்படி நாகரீகமாக இருக்கிறது.உலகில் வாழ்கிறது என்றும் இவர்கள்
அறியவில்லை என்பதுதான் பெரிய கவலையான விடயம்.
ஆக,இந்த கொச்சை,பசசையாக பேசுபவர்கள் தங்களை திருத்திக்கொள்ள
வேண்டும். இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைக் கூறாமல் கடும்
சொற்களையோ,அருவருப்பான பேச்சுக்களையோ கூறுவது கூடாது .
இதையே வள்ளுவரும் சொல்கிறார்.,
"இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று " இதை அறிந்து இனியாவது உங்களை
திருத்திக் கொள்ளுங்கள்.

மிகவும் சரியாகச் சொன்னீர்கள், நாகரீகத்தை படித்து நடக்க வேண்டும் அல்லது நாகரீகமானவர்களுடன் பழகிவாழ வேண்டும்............